மண்ணைக் கவ்வியது இந்திய அணி

1 mins read
c78d2718-2530-4fba-b256-89f981cba3be
-

லண்டன்: லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்கள் வித்தி யாசத்தில் இந்தியா படு தோல்வியைச் சந்தித்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 107 ஓட்டங்கள் எடுத்தது. இங்கி லாந்து 7 விக்கெட்டுகளுக்கு 396 ஓட்டங்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. 289 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்தியா 130 ஒட்டங்களுக்குள் சுருண்டது. மழை காரணமாக ஆட்டம் இருமுறை நிறுத்தி வைக்கப்பட்டது.

"நாங்கள் விளையாடிய விதம் பற்றி நினைத்து எந்த வகையிலும் பெருமை கொள்ள முடியாது. கடைசியாக விளையாடிய ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இந்த ஆட்டத்தில் நாங்கள் முழுமையாக வீழ்த்தப்பட்டுவிட்டோம். "நாங்கள் விளையாடிய விதத் தைப் பார்க்கும்போது வெற்றி பெறும் தகுதி எங்களுக்கு இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது. விளையாடி கொண்டிருக்கும் போது வானிலைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க முடி யாது. வானிலையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.

தமது விக்கெட் பறிபோகாமல் இருக்க கிரீஸை நோக்கிப் பாய்கிறார் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்தியாவின் விக்கெட்டைச் சாய்க்க முனைப்பு காட்டுகிறார் இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவ் (இடது). படம்: ஏஎஃப்பி