மட்ரிட்: அனைத்துலகக் காற்பந்துப் போட்டி களிலிருந்து ஸ்பெயின் குழுவின் டாவிட் சில்வா (படம்) ஒய்வுபெற்று உள்ளார். இங்கிலிஷ் பிரிமியர் லீக் நடப்பு வெற்றி யாளரான மான்செஸ்டர் சிட்டியில் அவர் தொடர்ந்து விளையாடு வார். 2008ஆம் ஆண்டி லிருந்து 2012ஆம் ஆண்டு வரை ஸ்பெ யின் மூன்று பிரதான பட்டங்களை அடுத் தடுத்து வென்றது. ஸ் பெ யி னு க் கு ப் பெருமை சேர்த்த அக்குழுவில் சில்வாவும் இடம்பெற்றிருந்தார். ஸ்பெயினுக்காக விளையாடி உலகக் கிண்ணம் மற்றும் ஐரோப்பிய கிண்ணத்தை வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் சில்வா. அனைத்துலகக் காற்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவது குறித்து மிகவும் சிரமப்பட்டு முடிவெடுத்ததாக சில்வா தெரிவித்தார். இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு பல நாட்கள் யோசித்ததாகவும் அவர் கூறினார். இருப்பினும், தமக்குக் கிடைத்த மகிழ்ச்சியான அனுபவங்களுடன் விடைபெற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
அனைத்துலகக் காற்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் டாவிட் சில்வா
1 mins read
-

