கோஹ்லி, சாஸ்திரிக்கு நெருக்குதல்

1 mins read
c310accd-5030-45ed-81ad-81e5aed08043
-

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து இந்திய வீரர்கள் கடுமையாக விமர்சிக் கப்படுகின்றனர். அதிலும், அணித் தலைவர் விராத் கோஹ்லிக்கும் அணியின் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரிக்கும் நெருக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம் நியமித்த வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் குழு தற்போது இந்திய அணியின் செயல்பாட்டை மிக அணுக்கமாகக் கவனித்து வருகிறது. இந்திய அணியின் ஆக அண்மைய செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என நிர்வாகக் குழு கூறியுள்ளது.

குறிப்பாக, ரவி சாஸ்திரியின் மீது நிர்வாகக் குழுவின் பார்வை பாய்ந்துள்ளது. இரண்டாவது டெஸ்ட்டில் தோல்வி அடைந்ததால் இந்தியா 2=0 எனத் தொடரில் பின்தங்கியுள்ளது. இந்தியா அதன் முதல் இன்னிங்ஸில் 107 ஓட்டங்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 130 ஓட்டங்களும் எடுத்து அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. இறுதியில் இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வாகை சூடியது.

இங்கிலாந்தின் லார்ட்ஸ் விளையாட்டரங்கத்தில் கலந்து பேசும் இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி (இடது), அணித் தலைவர் விராத் கோஹ்லி. படம்: ராய்ட்டர்ஸ்