ராமோஸ்: லிவர்பூல் தோல்விக்கு நான் காரணம் அல்ல

ராமோஸ்: லிவர்பூல் தோல்விக்கு நான் காரணம் அல்ல

1 mins read
1fe26bfb-5080-4e97-b204-4fe0a42f9160
-

டாலின்: லிவர்பூல் அணி, முக்கிய காற்பந்து ஆட்டங்களில் தோல்- வியைத் தழுவியதற்கு அதன் பயிற்றுவிப்பாளர் யர்கன் குளாப்பே காரணம் என்று ரியால் மட்ரிட் அணித் தலைவரும் தற்காப்பு ஆட்டக்காரருமான செர்ஜியோ ராமோஸ் குறைகூறியுள்ளார். அண்மைக் காலமாகவே இரு- வருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இவ்வாண்டு மே மாதம் லிவர்- பூலுக்கும் ரியால் மட்ரிட்டுக்கும் இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் இறுதிச் சுற்றுப் போட்டியில் ரியால் 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது. இந்த ஆட்டத்தில் லிவர்பூலின் தாக்குதல் ஆட்டக்காரர் முகமது சாலாவின் மீது ராமோஸ் இழைத்த தவற்றினால் சாலாவுக்கு தோள் பட்டையில் கடுமையான காயம் ஏற்பட்டது.

திடலிலிருந்து கண்ணீருடன் வெளியேறிய சாலாவால், ரஷ்யா- வில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் சிறப்பாக விளையாட முடியாமல் போனது.