ஜகார்த்தா: இந்தோனீசியாவில் நடைபெறும் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டியைக் காண ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ரசிகர்கள் ஜகார்த்தாவில் குவிந்து உள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டி நாளை மறுதினம் சனிக்கிழமை முதல் அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. கடந்த 1951ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தப் போட்டியை அப்போது இந்தியா முதன்முறை யாக ஏற்று நடத்தியது. இறுதிச் சுற்றுக்கு செல்வோரை நிர்ணயிக்க காற் பந்து, கூடைப்- பந்து, சுவர்ப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பிரிவு- களில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஏற்கெனவே தொடங் கிவிட்டன.
போட்டிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. போட்டி தொடங்க இன்னும் இரு நாட்கள் மட்டுமே இருப்பதால் போட்டியில் பங்கேற்க வெளிநாடு- களைச் சேர்ந்த வீரர்கள், வீராங் கனைகள் குவிந்துள்ளனர்.
இந்தோனீசியாவின் போகோரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்களுக்கான 'பி' பிரிவு காற்பந்து ஆட்டத்தில் கத்தார், தாய்லாந்து அணிகள் பொருதின. படம்: ஏஎஃப்பி

