ரொனால்டோ இல்லாத தவிப்பில் ரியால் மட்ரிட்

ரொனால்டோ இல்லாத தவிப்பில் ரியால் மட்ரிட்

1 mins read
e1416081-6065-4b59-a708-a207946f5af0
-

எஸ்டோனியா: கிரிஸ்டியானோ ரொனால்டோவும் ரியால் மட்ரிட்டுக்கு சென்ற காற்பந்துப் பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை பெற்று தந்த அதன் நிர்வாகியான ஸினடின் ஸிடானும் இல்லாத ரியால் மட்ரிட் குழு சூப்பர் கிண்ண இறுதிப் போட்டியில் தடுமாறி அட்லெட்டிகோ மட்ரிட்டிடம் நேற்று தோல்வியை தழுவியது. நேற்றைய ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே அட்லெட்டிகோ மட்ரிட்டின் டியேகோ கோஸ்டா கோலடித்து ரியாலை திணற வைத்தார். பின்னர் ஒருவாறு சுதாரித்துக் கொண்ட ரியால், கரிம் பென்சிமா மூலம் ஒரு கோல் போட்டு சமநிலை செய்த பின் ஆட்டத்தின் 63ஆம் நிமிடத்தில் தற்காப்பு ஆட்டக்காரரான செர்ஜியோ ரமோஸ், கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் போட்டு தமது அணிக்கு முன்னிலை பெற்ற்து தந்தார்.

எனினும், ஆட்டத்தின் 79ஆம் நிமிடத்தில் மீண்டும் தனது கைவரிசையைக் காட்டிய டியோகோ கோஸ்டா இரண்டாவது கோலைப் போட்டார். ஆட்டம் முடிவதற்கு சில வினாடிகளே உள்ள நிலையில் ரியாலின் தற்காப்பு வீரரான மார்செலோ தனக்கு கிடைத்த அருமையான கோல் போடும் வாய்ப்பை வீணடிக்க, ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது.