ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

1 mins read
2403818a-0ae3-4cb5-86dd-103e76be8f04
-

ஜகார்த்தா: நான்கு ஆண்டு களுக்கு ஒரு முறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று இந்தோனீசிய தலைநகர மான ஜகார்த்தாவில் கோலாகல மாக தொடங்குகின்றன. இப்போட்டி 1951ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் கண்டது. இந்தப் போட்டிகள் கடைசியாக 2014 ஆம் ஆண்டில் தென்கொரியா வின் இஞ்ச்யான் நகரில் நடந்தது. 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா ஜகார்த்தாவின் ஜிபிகே பிரதான விளையாட்டரங்கில் சிங்கப்பூர் நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை ஜகார்த்தா, பாலெம்பாங் ஆகிய நகரங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறுகி ன்றன. ஆசிய விளையாட்டுப் போட்டி கள் இரு நகரங்களில் நடத்தப்ப டுவது இதுவே முதன்முறை. 56 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தோனீசியாவில் இந்தப் போட்டி கள் நடைபெறுகின்றன. கடைசி யாக 1962ஆம் ஆண்டு இந்தப் போட்டிகள் அங்கு நடைபெற்றன. இவற்றில் சிங்கப்பூர், மலேசியா, வியட்னாம் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, கஸக்ஸ் தான், ஈரான், தாய்லாந்து, தைவான், கத்தார் உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்கின்றன. 58 விதமான விளையாட்டுகளில் 482 பிரிவுகளில் நடைபெறும் இப் போட்டியில் சுமார் 10,000 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கி றார்கள்.

இந்தோனீசியாவில் இன்றிரவு தொடங்கவுள்ள 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோ ஜகார்த்தாவில் நேற்று சுடரை ஏந்திச் சென்றார். படம்: ஏஎஃப்பி