ஃபிஃபா தரவரிசை: பிரான்ஸ் முதலிடத்திற்கு முன்னேற்றம்

ஃபிஃபா தரவரிசை: பிரான்ஸ் முதலிடத்திற்கு முன்னேற்றம்

1 mins read

ஸ`ரிக்: ரஷ்யாவில் கடந்த மாதம் 15ஆம் தேதி முடிவடைந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை வென்ற பிரான்ஸ், தற்போது ஃபிஃபா தர வரிசையில் ஆறு இடங்கள் முன் னேறி முதல் இடத் தைப் பிடித்துள்ளது. இப்போட்டியில் அரையிறுதி வரை சென்ற இங்கிலாந்து உலகத் தரவரிசையில் 12வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு முன் னேறியுள்ளது. அரையிறுதியில் அந்த அணி குரோவே‌ஷியாவிடம் தோற்றது. இங்கிலாந்து அணியைப் போல அரையிறுதியோடு போட்டி யிலிருந்து வெளியேறிய பெல்ஜியம் ஒரு இடம் முன்னேறி 2வது இடத் தைப் பிடித்துள்ளது. உலகக் கிண்ணப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் வெளியேறிய பிரேசில், தரவரிசையில் ஒரு இடம் பின்தங்கி 3வது இடத் திற்குச் சரிந்துள்ளது. உலகக் கிண்ண இறுதிப் போட் டிக்கு முன்னேறிய குரோவே‌ஷியா 16 இடங்கள் பாய்ந்து 4வது இடத் தைப் பிடித்துள்ளது. உருகுவே ஐந்தாவது இடத்தை யும் போர்ச்சுகல் 7வது இடத்தையும் பிடித்துள்ளன. சுவிட்சர்லாந்து 8வது இடத்தை யும் ஸ்பெயின், டென்மார்க் சமமா க 9வது இடத்தையும் பிடித்து உள்ளன. ஆனால், உலகக் கிண்ணப் போட்டியின் 'ரவுண்ட் ஆஃப் 16' சுற்றில் வெளியான அர்ஜெண்டினா 6 இடங்கள் பின் தங்கி 11வது இடத்தைப் பிடித்து உள்ளது.