மல்யுத்தம்: ஜப்பானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா

மல்யுத்தம்: ஜப்பானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா

1 mins read

பலெம்பாங்: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு 2வது தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார் வீராங்கனை வினேஷ் போகத். நேற்று நடைபெற்ற மகளிருக் கான 50 கிலோ ப்ரீஸ்டைல் மல் யுத்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் வினேஷ் போகத் ஜப்பானின் யுகியை எதிர்கொண் டார். அதில் 6-2 என்கிற கணக்கில் அபார வெற்றி பெற்று தங்கம் வென்றார் வினேஷ் போகத். ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்கிற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். அதே சமயம் 60 கிலோ பிரிவில் அரையிறுதியில் தோல் வியைத் தழுவினார் சாக்‌ஷி மாலிக். ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதலில் டிரப் பிரிவில் இறுதிப் போட்டியில் சீன தைப்பே வீரரிடம் தோற்ற இந்தியாவின் இளம் வீர ரான லக்சாய் ‌ஷியோரன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.