மட்ரிட்: ரியால் மட்ரிட் காற்பந்துக் குழுவின் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டோ இல்லாமல், ஸ்பானிய லா லீகா ஆட்டத்தில் கெட்அஃபே குழுவை எதிர் கொண்டது ரியால் மட்ரிட். ரொனால்டோ இல்லாத குறையை நீக்கிய கேரத் பேலால், தற்போதைய பருவத்தின் முதல் ஆட்டத்தில் மட்ரிட் குழு வெற் றியை ருசித்தது. கேரத் பேல் உதைத்த பந்தை கோல் காப்பாளர் திருப்பி அனுப்ப அதை 20வது நிமிடத்தில் முதல் கோல் ஆக்கினார் டேனி கேர் வஜல். அதன் பிறகு கேரத் பேல் தலையால் முட்டித் தள்ளிய பந்து வலைக்குள் செல்ல ரியாலின் வெற்றி உறுதியானது. கெட்அஃபே குழுவால் ஒரு முறை மட்டுமே கோல் கம்பத்தை நோக்கி பந்தை உதைக்க முடிந் தது. ஆனால் அப்பந்தும் கோலா காத நிலையில், 2-0 என ரியால் மட்ரிட் வென்றது.
ரொனால்டோ இல்லாத ரியால் மட்ரிட் குழுவின் வெற்றிக்கு வித்திட்ட கேரத் பேல்
1 mins read

