பலெம்பாங்: நூறு மீட்டர் வண் ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் ஒலிம்பிக் வெற்றியாளரான சிங் கப்பூர் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் கின் 50 மீட்டர் எதேச்சை பாணி முயற்சி தகுதிச்சுற்றுடன் முடி வுக்கு வந்தது. ஆசிய விளையாட்டுப் போட்டி களில் 50 மீ. எதேச்சை பாணி நீச்சலில் நேற்று முதன்முறையாகப் பங்கேற்றார் 23 வயதான ஸ்கூலிங். பந்தய தூரத்தை 23.05 வினாடிகளில் கடந்த அவர், ஒட்டுமொத்தத்தில் 17வது இடத்தைப் பிடித்தார். போட்டிக்குப் பின் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், "எப் போதுமே என்னால் முடிந்த அளவு சிறப்பாகச் செய்ய முயன்று வருகிறேன். 50 மீட்டர் பந்தயங் களைப் பொறுத்தவரை என்ன நிகழும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அடுத்த போட்டியை எதிர்நோக்கி உள்ளேன்," என்றார்.
அடுத்ததாக, இன்று காலை நடக்கவிருக்கும் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி தகுதிச் சுற்றில் அவர் பங்கேற்கவுள்ளார். இதனிடையே, 50 மீ. எதேச்சை பாணி நீச்சலில் ஸ்கூலிங் இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்த போதும் இன்னொரு சிங்கப்பூர ரான 19 வயது டியோங் ஸென் வெய் இறுதிக்கு முன்னேறினார். தகுதிச் சுற்றில் ஒட்டுமொத்த அளவில் 5வது இடத்தைப் பிடித்த டியோங், இறுதிச் சுற்றில் பதக்க வாய்ப்பைப் பறிகொடுத் தார். 22.59 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்த அவரால் ஆறா மிடத்தையே பிடிக்க முடிந்தது. சீனாவின் ஹெக்சின் யூ 22.11 வினாடிகளில் பந்தயத்தை முடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். வெள்ளியும் வெண்கலமும் ஜப்பானுக்குக் கிட்டியது. முன்னதாக, திங்கட்கிழமை நடந்த ஆடவருக்கான 4x100 மீட்டர் எதேச்சை பாணி அஞ்சல் நீச்சலில் ஸ்கூலிங் அடங்கிய சிங்கப்பூர்க் குழு வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத் தக்கது.

