மான்செஸ்டர்: கடந்த வார இறுதியில் நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் பிரைட்டன் குழுவிடம் 3=2 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் குழு தோற்று அதிர்ச்சியளித்தது. இதையடுத்து, அக்குழுவின் நிர்வாகி பதவியிலிருந்து ஜோசே மொரின்யோ நீக்கப்பட்டு, புதிய நிர்வாகியாக முன்னாள் பிரெஞ்சு ஜாம்பவானும் ரியால் மட்ரிட் குழு நிர்வாகியுமான ஸினடின் ஸிடான் நியமிக்கப் படலாம் எனப் பேச்சு எழுந்தது. இந்நிலையில், அப்படியோர் எண்ணமே தங்களுக்கு இல்லை என யுனைடெட் நிர்வாகம் கூறியுள்ளதால் மொரின்யோ தற்காலிகமாக நிம்மதி அடைந்துள்ளார்.
மொரின்யோ பதவிக்கு ஆபத்தில்லை
1 mins read

