லண்டன்: கிரிஸ்டல் பேலஸ் குழுவிற்கு எதிராக நேற்று அதிகாலை நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் லிவர்பூல் 2=0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜேம்ஸ் மில்னரும் சாடியோ மானேவும் லிவர்பூல் சார்பில் ஆளுக்கு ஒரு கோல் அடித்தனர். நடப்புப் பருவத்தில் இரண்டு ஆட்டங்களே முடிந்துள்ள நிலையில் அவ்விரண்டிலும் வென்ற லிவர்பூலுடன் சேர்த்து மொத்தம் ஆறு குழுக்கள் ஆறு புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன. இருந்தாலும், கோல் வித்தியாசம் மூலம் லிவர்பூல் இரண்டாமிடத்திற்கு உயர்ந்தது. நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி முதலிடத்தில் உள்ளது. (படத்தில்) கிரிஸ்டல் பேலஸ் கோல்காப்பாளரை ஏமாற்றி, பந்துடன் வலையை நோக்கி முன்னேறும் சாடியோ மானே. படம்: ஏஎஃப்பி
2ஆம் நிலையில் இருக்கும் லிவர்பூல்
1 mins read
-

