உருட்டுப்பந்து போட்டியில் சிங்கப்பூருக்கு வெண்கலப் பதக்கம்

1 mins read
0f1e8170-8b27-4d13-9378-de8d863f6be3
-

பலெங்பாங்: இந்தோனீசியாவில் நடைபெற்று வரும் ஆசியான் விளையாட்டுத் தொடரில் நேற்று நடந்த பெண்களுக்கான உருட் டுப்பந்துப் போட்டியில் மூன்று வீராங்கனைகளைக் கொண்ட சிங்கப்பூர்க் குழு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. ஜோய் இயோ, டஃப்னி டான், பெர்னிஸ் லிம் ஆகியோரே அந்த வீராங்கனைகள். அவர்கள் மொத்தம் 4,250 புள்ளிகள் பெற்று மலேசியாவுக்கும் சீனாவுக்கும் அடுத்த இடத்தைப் பிடித்தனர்.

சிங்கப்பூரின் உருட்டுப்பந்துக் குழு, மூன்று போட்டிகளில் பங்கெடுத்ததற்குப் பிறகு சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. சிங்கப்பூரின் இன்னொரு குழுவினரான செர்ரி டான், ஷயானா இங், ஜஸ்ரீல் டான் ஆகியோர் 3,936 புள்ளிகள் பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளனர். 2014ஆம் ஆண்டு இஞ்ச்யானில் நடந்த ஆசியான் விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூரின் பெண்களுக்கான உருட்டுப் பந்துக் குழு, ஒரு தங்கப் பதக்கமும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களும் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றது.

(இடமிருந்து) உருட்டுப் பந்து வீராங்கனைகள் ஜோய் இயோ, டஃபனி டான், பெர்னிஸ் லிம் ஆகிய மூவர் அடங்கிய குழு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்