வாட்சண்டை: குழுப் பிரிவில் முதல் பதக்கம்

1 mins read

ஜகார்த்தா: வாட்சண்டை அரை இறுதியில் சிங்கப்பூர்க் குழு 14=45 எனும் புள்ளிக் கணக்கில் சீனாவிடம் தோற்றுப் போனது. ஆயினும், மூன்றாவது இடத்திற் கான மோதல் இல்லாததால் சிங்கப்பூர்க் குழு வெண்கலப் பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டி களில், சிங்கப்பூர் வாட்சண்டைக் குழு பதக்கம் வென்றிருப்பது இதுவே முதன்முறை. முன்னதாக, நேற்றுக் காலை நடந்த காலிறுதியில் அமிதா பெர்த்தியர், மேக்சின் வோங், டட்டி யானா வோங், மெலானி ஹுவாங் ஆகியோர் அடங்கிய சிங்கப்பூர்க் குழு 45-19 எனும் புள்ளிக் கணக்கில் தைவானை வீழ்த்தியது. 2014ஆம் ஆண்டு லிம் வெய் வென் வெண்கலம் வென்றதே ஆசிய விளையாட்டுப் போட்டி களில் வாட்சண்டையில் சிங்கப் பூருக்குக் கிட்டிய முதல் பதக்கம்.