ஜுஜிட்சு விளையாட்டில் சிங்கப்பூருக்கு வெள்ளி

ஜுஜிட்சு விளையாட்டில் சிங்கப்பூருக்கு வெள்ளி

1 mins read
c1c55ba0-1b11-4ebf-88f5-bbb4dfe3062b
-

ஜகார்த்தா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாக அறிமுகம் கண்ட ஜப்பானிய மல்யுத்த விளையாட்டுகளில் ஒன்றான 'ஜுஜிட்சு'வில் 19 வயது சிங்கப்பூர் வீராங்கனை கான்ஸ்டன்ஸ் லியன் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவர் தென்கொரிய வீராங்கனை கிரா சங்கிடம் 4-2 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றுப்போனார். பள்ளியில் படித்தபோது நீச்சல் வீராங்கனையாக இருந்த கான்ஸ்டன்ஸ், 2015ஆம் ஆண்டில்தான் ஜுஜிட்சு விளையாட்டுக்கு மாறினார்.

2017ஆம் ஆண்டு அபுதாபியில் உலக அளவில் நடந்த போட்டியில் நான்காமிடம் பிடித்திருந்ததே இவரின் ஆகச் சிறந்த செயல்பாடு. (படத்தில்) இறுதிப் போட்டியில் தென்கொரியாவின் கிரா சங்குடன் தங்கப் பதக்கத்திற்கு மல்லுக்கட்டும் சிங்கப்பூரின் கான்ஸ்டன்ஸ் லியன் (மேல்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்