வெள்ளி வென்றார் ஹீமா தாஸ்

வெள்ளி வென்றார் ஹீமா தாஸ்

1 mins read
f913905a-faf2-43d6-9311-e36349b71b50
-
Google News Preferred Icon

களில் இந்தியாவின் புதிய நட் சத்திரமாக உருவெடுத்துள்ள 18 வயதே ஆன ஹீமா தாஸ் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார். நேற்றிரவு நடந்த 400 மீட்டர் ஓட்டத்தின் இறுதிச் சுற்றில் அவர் 50.79 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து இரண்டாவதாக வந்தார். பஹ்ரைன் வீராங்கனை நாசர் சல்வா 50.09 வினாடிகளில் எல்லையைத் தொட்டு, புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். அண்மையில் பின்லாந்தில் நடந்த உலக ஜூனியர் சாம்பி யன்‌ஷிப் போட்டிகளில் ஹீமா தங்கப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆடவருக்கான 400 மீ. ஓட் டத்திலும் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிட்டியது. 23 வயதான முகம்மது அனாஸ் யகியா பந்தய தூரத்தைக் கடக்க 45.69 வினாடி களை எடுத்துக்கொண்டார். கத்தாரின் ஹசன் அப்துல்லா தங்கத்தைத் தட்டிச் சென்றார். 10,000 மீட்டர் ஓட்டத்தில் லட்சுமணன் கோவிந்தன் வெண் கலம் வென்றார்.