'பிரிட்ஜ்' போட்டியில் சிங்கப்பூர் தங்கம்

'பிரிட்ஜ்' போட்டியில் சிங்கப்பூர் தங்கம்

1 mins read
Google News Preferred Icon

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளை யாட்டுப் போட்டியில் சிங்கப்பூர் குழு மூன்றாவது தங்கப் பதக் கத்தை நேற்று வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டி யில் முதன்முதலாக சேர்க்கப்பட்ட 'பிரிட்ஜ்' போட்டியின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் ஆடவர் குழு ஹாங்காங்கை எதிர்கொண் டது. அதில் 107-52 என வென்ற சிங்கப்பூர் குழு தங்கப் பதக்க த்தைக் கைப்பற்றியது. முன்னதாக 'சீலாட்' போட்டி யின் பெண்கள் பிரிவில், நூருஸா ஹைரா யாசித் 445 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். அதுபோல் ஆடவர் பிரிவு 'சீலாட்' போட்டியில் ஷேக் ஃபெர் தோஸ் ஷேக் அலாவுதீனும் வெள்ளிப் பதக்கம் வென்றார். இருவரும் இந்தோனீசியாவி டம் தங்கத்தைப் பறிகொடுத்தனர். 'செபாக் தக்ரா' போட்டியின் அரையிறுதியில் மலேசியாவிடம் 21-8, 21-8 எனத் தோற்ற சிங்கப் பூர் குழு வெண்கலப் பதக்கம் வென்றது. நேற்று இரவு எட்டு மணி வரை சிங்கப்பூர் மூன்று தங்கம், நான்கு வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 16வது இடத்தைப் பிடித்திருந்தது.