சௌத்ஹேம்டன்: இங்கிலாந்து, இந்தியா 4வது டெஸ்ட் கிரிக் கெட் போட்டியில் நேற்று இந்தி யாவின் விராத் கோஹ்லி ஆறு ஓட்டங்கள் எடுத்தபோது டெஸ்ட் போட்டியில் அதிவேக 6,000 ஓட்டங்களை எட்டிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். டெஸ்ட் போட்டியின் 119 இன் னிங்சில் அவர் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் 117 இன்னிங்சில் 6,000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்து முதல் இடத்தில் உள்ளார். அதுபோல் இந்திய வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகள் எடுத்த 3வது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். கபில்தேவ் மற்றும் ஜாகீர் கான் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். நேற்று இரவு 9 மணி நிலவரப்படி இந்தியா தனது முதல் இன்னிங்சில் 139 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் டுகள் இழந்திருந்தது.
6,000 ஓட்டங்கள்: கோஹ்லி சாதனை
1 mins read

