கிரிக்கெட்டிற்கு எல்லையில்லை என நிரூபித்து வரும் ரசிகர்கள்

கிரிக்கெட்டிற்கு எல்லையில்லை என நிரூபித்து வரும் ரசிகர்கள்

2 mins read
08a53785-52e0-471b-bf81-80d5af1bd286
-

துபாய்: அண்டை நாடுகளாக இருந்தாலும் காஷ்மீர், பயங்கர வாதம் போன்ற நீண்டகாலப் பிரச்சினைகளால் இந்தியா = பாகிஸ்தான் இடையிலான உறவு சுமுகமாக இல்லை. ஆயினும், இந்தியாவின் சுதிர் குமாரும் பாகிஸ்தானில் பிறந்த முகம்மது ப‌ஷீரும் 'கிரிக்கெட்டுக்கு எல்லை இல்லை' என நிரூபித்து, நண்பர்களாகத் திகழ்ந்து ஆச்சரிய மளித்து வருகின்றனர். ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் நடைபெற்று வரும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளைக் காணும்போது திரு சுதிர்குமார் தம்முடன் இருக்கவேண்டும் என் பதற்காக, தன் கையிலிருந்தே பணத்தையும் செலவிட்டுள்ளார் திரு ப‌ஷீர். இந்தியாவின் பீகார் மாநிலம், முஸாஃபர்பூரைச் சேர்ந்த 37 வய தான திரு சுதிர், இந்திய அணி உலகில் எங்கெல்லாம் சென்று விளையாடுகிறதோ அங்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வரு கிறார்.

அதற்காக ஆகும் செலவு களைப் பெரும்பாலும் இந்திய முன்னாள் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரே ஏற்றுக்கொள்வார். இம்முறை லண்டனில் இருக் கும் சச்சினைத் தொடர்புகொள்ள முடியாமல் போனதால் திரு சுதிர் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்குச் செல்ல முடியாத நிலை. இந்த நிலையில் அவருக்குக் கைகொடுத்தார் அமெரிக்காவில் வசித்துவரும் திரு ப‌ஷீர். 'ஆசியக் கிண்ணப் போட்டிகளைக் காண எப்போது துபாய் வருகிறீர்கள்?' என்று சிகாகோவிலிருந்து தொலை பேசி வழியாகத் தம் நண்பர் சுதிரிடம் கேட்டுள்ளார் திரு ப‌ஷீர்.

அப்போது, தம்மால் வர முடியாத சூழலை அவரிடம் சொன்னார் திரு சுதிர். இதையடுத்து, வேண்டிய உத வியைச் செய்து அவரை துபாய்க்கு வரவழைத்தார் திரு ப‌ஷீர். இந்திய அணி தங்கியுள்ள ஹோட்டலிலேயே இவ்விருவரும் ஓர் அறையை எடுத்துத் தங்கியுள்ளனர். இன்று நடக்கும் இறுதிப் போட் டியில் பாகிஸ்தான் விளையாட வில்லை என்றாலும் பார்வையாளர் பகுதியில் இருந்தபடி நண்பர் சுதி ருடன் சேர்ந்து இந்தியக் கொடியை அசைத்து இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளார் திரு ப‌ஷீர்.

இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடும் எல்லாப் போட்டிகளிலும் சுதிர் குமாரையும் (இடது) முகம்மது ப‌ஷீரையும் காணலாம். படம்: ஏஎஃப்பி