லண்டன்: இந்தக் காற்பந்துப் பருவத்தில் லிவர்பூல் குழுவிற்கு முதன்முறையாக தோல்வியைப் பரிசளித்தது செல்சி குழு. இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் இதுவரை நடந்த ஆறு ஆட்டங் களிலும் வென்ற லிவர்பூல் 18 புள்ளிகளுடன் பட்டியலின் முதல் இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில், லீக் கிண்ணத் திலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் சொந்த ஆன்ஃபீல்ட் விளையாட்டரங்கில் செல்சியை எதிர்கொண்டது அக்குழு. முற் பாதி கோலின்றி முடிந்தபோதும் ஆட்டத்தின் 58 நிமிடத்தில் ஸ்டரிஜ் அடித்த கோலால் லிவர்பூல் முன்னிலைக்குச் சென்றது. ஆனாலும் கடைசி கால் மணி நேரத்தில் அதன் பிடி சற்றுத் தளர, செல்சி வீரர்கள் அதைச் சாதகமாக்கிக்கொண்டனர். 79வது நிமிடத்தில் எமர்சன் கோலடித்து ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வந்தார்.
ஆட்டம் முடிய ஐந்து நிமிடங் களே இருந்தபோது நட்சத்திர வீரர் ஈடன் ஹசார்ட் தனியாளாகப் பந்துடன் லிவர்பூலின் கோல் பகுதிக்கு முன்னேறி, அற்புதமாக கோலடித்து செல்சிக்கு வெற்றி தேடித் தந்தார். மற்றோர் ஆட்டத்தில், டேனி வெல்பெக் இரு கோல்களையும் அலெக்சாண்டட் லாக்கஸெட் ஒரு கோலையும் அடிக்க, ஆர்சனல் 3=1 என்ற கோல் கணக்கில் பிரன்ட்ஃபர்ட் குழுவைத் தோற்க டித்தது. டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர், வாட்ஃபர்ட் குழுக்களுக்கு இடை யிலான ஆட்டம் 2-=2 எனச் சமனில் முடிந்தது. இருப்பினும், பெனால்டி வாய்ப்புகளில் 4=2 என வெற்றி பெற, ஸ்பர்ஸ் காலிறுதிக்கு முந்திய சுற்றில் நுழைந்தது. இதற்கிடையே, நாளை பின் னிரவு 12.30 மணிக்கு ஸ்டாம் ஃபர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடக்க இருக்கும் இபிஎல் ஆட்டத்தில் செல்சியும் லிவர்பூலும் மீண்டும் மோதவிருக்கின்றன.

