இன்று இந்தியாவுடன் பலப்பரிட்சை

இன்று இந்தியாவுடன் பலப்பரிட்சை

2 mins read

துபாய்: இன்று நடக்கவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பங்ளாதேஷை வீழ்த்தி வட்டார அளவில் தனது ஆதிக் கத்தை நிலைநிறுத்தும் முனைப் புடன் இந்திய அணி உள்ளது. இந்த ஆசியக் கிண்ணத் தொடரில், பரம எதிரியான பாகிஸ் தானை மூன்றாவது முறையாக இந்திய அணி எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமீம் இக்பால், ஷாகிப் அல் ஹசன் என முக்கிய வீரர்கள் இல்லாத நிலையிலும் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்து இறு திக்குள் நுழைந்தது பங்ளாதேஷ். ஏழாவது முறையாக ஆசியக் கிண்ணத்தை வெல்லும் நோக்கு டன் இந்திய களமிறங்குகிறது. மாறாக, இதற்குமுன் இரண்டு முறை இறுதிக்கு முன்னேறிய போதும் கைநழுவிய கிண்ணத்தை இம்முறை கைப்பற்ற வேண்டும் என்று பங்ளாதேஷ் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது.

கடந்த முறை டி20 போட்டிகளாக இடம்பெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா எட்டு விக்கெட் வித்தி யாசத்தில் பங்ளாதேஷை வெற்றி கொண்டது. இறுதிப் போட்டிக்கு ஏற்கெ னவே தகுதி பெற்றுவிட்டதால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 'சூப்பர் 4' சுற்று ஆட்டத்தில் ஐந்து மாற்றங்களுடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால், அது எதிர்பார்த்த பலனைத் தர வில்லை. மாறாக, இந்திய அணி யின் நடுவரிசை பந்தடிப்பு பல வீனத்தை அது வெளிப்படுத்துவ தாக அமைந்தது. இந்நிலையில், அந்த ஆட்டத் தில் ஓய்வளிக்கப்பட்ட ரோகித் சர்மா, ‌ஷிகர் தவான், யுஸ்வேந்திர சகல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இன்று களமிறங்குவது உறுதி.