மட்ரிட்: நடப்பு ஸ்பானிய லா லீகா காற்பந்துப் பருவத்தில் முதல் இரு இடங்களில் இருக்கும் பார்சிலோனா, ரியால் மட்ரிட் குழுக்கள் நேற்று அதிகாலை நடந்த ஆட்டங்களில் தோற்று அதிர்ச்சியளித்தன. ரியால் குழு 0=3 என்ற கோல் கணக்கில் செவிய்யாவிடமும் பார்சிலோனா 1=2 என்ற கணக்கில் லெகானெஸ் குழுவிடமும் வீழ்ந்தன. இருப்பினும், பட்டியலில் அவற்றின் நிலைகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆறு ஆட்டங்களின் முடிவில் இவ்விரு குழுக்களும் தலா 13 புள்ளிகளைப் பெற்றிருந்தபோதும் கோல் வித்தியாச அடிப்படையில் பார்சிலோனா முதலிடத்தில் உள்ளது.
ரியால் மட்ரிட், பார்சிலோனா தோல்வி
1 mins read

