காஷ்யப்பைக் கைப்பிடிக்கும் சாய்னா

காஷ்யப்பைக் கைப்பிடிக்கும் சாய்னா

1 mins read
Google News Preferred Icon

ஹைதராபாத்: இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்களான சாய்னா நேவாலும் பாருபள்ளி காஷ்யப்பும் இவ்வாண்டு இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ளப்போவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. டிசம்பர் 16ஆம் தேதி திருமணம் நடக்கலாம் என்றும் 21ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது. இப்போது உலகத் தரவரிசையில் பத்தாம் இடத்தில் இருக்கும் சாய்னா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவர். காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றுள்ள 32 வயதான காஷ்யப், ஒலிம்பிக் போட்டிகளில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் பேட்மிண்டன் வீரர் என்ற சாதனையைப் படைத்தவர். இதற்கிடையே, கொரிய ஓப்பனில் விளையாடி வரும் சாய்னா காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.