இந்திய அணிக்கே உலகக் கிண்ணம்: ஃபிளமிங் கணிப்பு

இந்திய அணிக்கே உலகக் கிண்ணம்: ஃபிளமிங் கணிப்பு

1 mins read

புதுடெல்லி: பந்தடிப்பு, பந்துவீச்சு, களக்காப்பு என அனைத்துத் துறைகளிலும் வலிமையான அணி யாகத் திகழ்வதால் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வாகை சூட அதிக வாய்ப்புள்ளதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீஃபன் ஃபிளமிங் கணித்துள் ளார்.

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே இறுதியில் உலகக் கிண்ணப் போட்டிகள் தொடங்கவுள்ளன. மொத்தம் பத்து அணிகள் கிண் ணத்திற்காக மோதவுள்ளன. ஒவ்வோர் அணியும் மற்ற ஒன்பது அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக் குத் தகுதி பெறும்.

இந்நிலையில், இந்திய அணி யின் வெற்றி வாய்ப்பு குறித்து நம்பிக்கை தெரிவித்த ஃபிளமிங், அதே நேரத்தில் இங்கிலாந்தின் வெப்பமான காலநிலை இந்தியப் பந்துவீச்சாளர்களுக்குச் சவாலாக இருக்கும் என்றும் கூறினார். "புவனேஸ்வரும் பும்ராவும் காயமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்படி ஏதேனும் நிகழும் பட்சத்தில், அவர்களுக்குப் பதில் சரியான மாற்று வீரர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும்," என்றார் ஃபிளமிங். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யின் பயிற்றுவிப்பாளராக இருக்கும் அவர், அவ்வணிக்காக விளையாடி வரும் அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய அணியில் இருப்பது கூடுதல் பலமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.