காத்திருக்கும் சோதனை

காத்திருக்கும் சோதனை

2 mins read
f5955b84-c56a-423d-98c5-3801b2d0f026
-

லண்டன்: இந்தப் பருவ இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் இதுவரை நடந்த ஆட்டங்களில் தோல்வியே காணாத லிவர்பூல் குழுவும் செல்சி குழுவும் இன்று பின்னிரவு நடக்கும் ஆட்டத்தில் பொருத இருக்கின்றன. இன்றைய ஆட்டம் இவ்விரு குழுக்களுக்குமே கடும் சவாலாக வும் சோதனையாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நடந்த ஆறு ஆட்டங் களிலும் வென்று 18 புள்ளிகளுடன் லிவர்பூல் முதலிடத்தில் இருக் கிறது. முதல் ஐந்து ஆட்டங்களில் வென்ற செல்சி குழு, கடந்த வார இறுதியில் வெஸ்ட் ஹேம் யுனை டெட் குழுவுடன் சமன் கண்டதால் மூன்றாம் இடத்திற்கு இறங்கியது. இருப்பினும், இவ்வார மத்தியில் நடந்த லீக் கிண்ண ஆட்டத்தில் 2=1 என்ற கோல் கணக்கில் லிவர்பூலை வீழ்த்திய செல்சி குழு, இன்றும் அதை நிகழ்த்திக் காட்ட முடியும் என்று திடமாக நம்புகிறது.

அந்த ஆட்டத்தில் இரு குழுக் களுமே தரப்பிற்கு எட்டு மாற்றங் களைச் செய்திருந்தன. செல்சியின் நட்சத்திர ஆட்டக் காரர் ஈடன் ஹசார்ட் இன்றும் தங்களுக்கு மிகப் பெரிய அச்சு றுத்தலாக இருப்பார் என்று லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப் கருதுகிறார். லீக் கிண்ண ஆட் டத்தின் 85வது நிமிடத்தில் ஒற்றை ஆளாகப் பந்துடன் முன்னேறி ஹசார்ட் அடித்த கோல் இப்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு ரஷ்யாவில் நடந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் பெல்ஜியம் அணி மூன்றாம் இடம் பிடித்ததற்கு ஹசார்டின் அற்புதச் செயல்பாடும் ஒரு காரணம். அவரது அருமையான ஆட்டம் நடப்பு இபிஎல் பருவத்திலும் தொடர்கிறது. லீக் கிண்ணப் போட்டியில் லிவர்பூலை வீழ்த்தியது மனத்தள வில் தம் குழுவினருக்குப் பெரும் நம்பிக்கையை அளித்திருப்பதாகக் கூறினார் ஹசார்ட்.