இந்திய அணிக்கு ஆசியக் கிண்ணம்

2 mins read
b6333453-087a-44b7-84e7-30291a0e68f5
-

துபாய்: இறுதிப் போட்டியில் பங்ளாதேஷை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. இந்த முடிவு பலரும் எதிர்பார்த்தது தான் என்றாலும் கடைசி பந்து வரை பங்ளாதேஷ் வீரர்கள் இந்திய அணிக்குப் பெரும் சவாலாக இருந்தனர். கடைசி பந்தில் ஓர் ஓட்டம் தேவைப்பட்ட நிலையில், மஹ்முதுல்லா வீசிய பந்து இந்திய வீரர் கேதார் ஜாதவின் காலில் பட்டுச் செல்ல, 'லெக் பை' முறையில் அந்த ஓட்டத்தை எடுத்து இந்திய அணி ஆட்டத்தை வென்று, நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

பங்ளாதேஷ் அணி முதலில் பந்தடித் தது. யாரும் எதிர்பார்த்திராதபடி, லிட்டன் தாஸŸடன் தொடக்க வீரராகக் களமிறங்கி னார் இளம் சுழற்பந்து வீச்சாளர் மெகதி ஹசன் மிராஸ். இதற்குமுன் ஒருமுறைகூட அரை சதத்தை எட்டியிராத லிட்டன் தாஸ், இறுதிப் போட்டியில் அதிரடியாக ஆடி வாணவேடிக்கை காட்டினார். மறுமுனை யில் மெகதி நிதானமாக ஆடி நல்ல ஒத்து ழைப்புத் தந்தார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 120 ஓட்டங்களைச் சேர்த்தனர். மெகதி 32 ஓட்டங்களில் ஆட்டமிழந்த தும் பங்ளாதேஷின் விக்கெட் சரிவும் தொடங்கியது. ஒரு முனையில் லிட்டனின் அதிரடி தொடர்ந்தாலும் அடுத்து வந்த வர்களில் ஒருவர்கூட அவருக்கு நல்ல ஒத்துழைப்புத் தரவில்லை.

ஆட்டத்தில்கூடத் தோற்காதபடி அணியைத் திறம்பட வழிநடத்தி வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றி சாதித்த மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் இந்திய அணியின் தற்காலிகத் தலைவர் ரோகித் சர்மா (இடமிருந்து 3வது). படம்: ஏஎஃப்பி