லிஸ்பன்: கேத்ரின் மயோர்கா எனும் 34 வயது அமெரிக்கப் பெண்மணியை போர்ச்சுகல், யுவென்டஸ் குழு காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 33 (படம்), பாலியல் வன்புணர்வு செய்துவிட்ட தாக 'டெர் ஸ்பைகல்' எனும் ஜெர்மானிய சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. லாஸ் வேகாஸ் ஹோட்டல் அறை ஒன்றில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரொனால்டோ தம்மை வன்புணர்வு செய்ததாக வும் அதை வெளியில் சொல்லாமல் இருக்க அவர் 375,000 அமெரிக்க டாலர் பணத்தைத் தந்ததாகவும் கேத்ரின் குற்றஞ்சாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இது பொய்யான குற்றச்சாட்டு என ரொனோல்டோ வின் வழக்கறிஞர் கிறிஸ்டியன் ஸெர்ட்ஸ் மறுப்புத் தெரிவித்து இருக்கிறார் என்று 'டெலிகிராப்' நாளிதழில் வெளியான இன்னொரு செய்தி கூறுகிறது. தம்முடைய உறவினர்களுடன் விடுமுறையைக் கழிக்க லாஸ் வேகாஸ் சென்றிருந்தபோது ரொனால்டோவுடன் மாலை நேர விருந்தில் கலந்துகொண்டதாக வும் அதன்பின் அவர் தம்மைக் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டதாகவும் கேத்ரின் தெரி வித்துள்ளார். 2018-10-30 06:00:00 +0800

