தொடர்ந்து ஓரங்கட்டப்படும் ரோகித் சர்மா; புதுமுகங்களுக்கு வாய்ப்பு

தொடர்ந்து ஓரங்கட்டப்படும் ரோகித் சர்மா; புதுமுகங்களுக்கு வாய்ப்பு

2 mins read
dd33025e-d112-4af7-9ae3-d16908e91a7d
-

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடுத்த மாதம் தொடங்க உள்ள டெஸ்ட் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வீரர்கள் ஓரங்கட்டப்பட்டு, புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், ‌ஷிகர் தவான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். புதிய வீரர்களான மயங்க் அகர்வால், பிருத்வி ஷா, முகமது சிராஜ் ஆகியோருக்கு இப் போட்டியில் வாய்ப்புக் கொடுக்கப் பட்டுள்ளது. இந்தியாவுக்குப் பயணம் மேற் கொள்ளவுள்ள வெஸ்ட் இண்டீஸ் 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள், 20 ஓவர் போட்டிகள் மூன்று ஆகியவற்றில் விளையாடு கிறது.

இதில் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இஷாந்த் சர்மா, ஹர்த்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீளாத நிலையில், குணமடைந்த அஸ்வின் மட்டும் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சொதப்பிய ‌ஷிகர் தவான், முரளி விஜய், தினேஷ் கார்த்தி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். ரோகித் சர்மாவுக்கு இம்முறையும் வாய்ப்பு வழங்கப் படவில்லை. இது தொடர்பாக முன்னாள் இந்திய அணித் தலைவர் கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில், "ஒவ் வொரு முறையும் டெஸ்ட் அணி அறிவிக்கப்படும்போது ரோகித் சர்மா பெயர் இடம் பெறாமல் போவது அதிர்ச்சி அளிக்கிறது. "அவர் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பெறுவது வெகு தொலைவில் இல்லை," என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் புதிய வீரர்கள் மயங்க் அகர்வால், பிருத்வி ஷா. படங்கள்: இந்திய ஊடகம்