லண்டன்: தான் நினைத்ததைவிட தன் வீரர்கள் லிவர்பூல் காற்பந்துக் குழுவை வேகமாக நெருங்குவ தாகக் கூறி உள்ளார் செல்சி நிர்வாகி மௌரி சியோ சர்ரி. லீக் கிண்ணத்தில் 2-1 என லிவர்பூலை வீழ்த்திய செல்சி, நேற்று அதிகாலை நடந்த இங்கி லிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் லிவர்பூலை 1-1 எனச் சமன் செய்தது. அதாவது கடந்த நான்கு நாட் களில் நடந்த இரண்டு போட்டி களிலும் லிவர்பூலிடம் செல்சி தோற்கவில்லை என்பது கவனிக் கத்தக்கது. அதுபோல் இபிஎல் போட்டியின் தற்போதைய பருவத்தில் இரு குழுக்களும் இதுவரை தோல் வியைச் சந்திக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய ஆட்டத்தில் ஈடன் ஹசார்ட்டின் 25வது நிமிட கோலால் செல்சி முன்னிலை பெற் றது. தொடர்ந்து கிடைத்த பல வாய்ப்புகளை லிவர்பூல் தவறவிட்ட தால், அதன் தோல்வியில்லா பய ணம் முடிவுக்கு வந்துவிடுமோ என்று எண்ணத் தோன்றியது. ஆனால், 89வது நிமிடத்தில் டேனியல் ஸ்டுரிட்ஜ் போட்ட கோலால் நிம்மதிப் பெருமூச்சு விட்டார் லிவர்பூல் நிர்வாகி கிளோப். சாலா, சாடியோ மனே, ஃபெர் மினோ போன்ற முன்னணி நட் சத்திரங்கள் இருந்தாலும் தற்போதைய பருவத்தில் லிவர்பூல் குழுவை தனது அபார ஆட்டத்தால் காப்பாற்றி வருகிறார் ஸ்டுரிட்ஜ். இப்பருவத்தின் ஏழு ஆட்டங்க ளிலும் அவர் நான்கு கோல்களைப் போட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து பேசிய கிளோப், "காயத்தில் இருந்து மீண்டு வந்த ஸ்டுரிட்ஜிற்கு இது மிகச்சிறந்த பருவமாக அமைந்து உள்ளது. "சில வாய்ப்புகளை வீணடித்து விட்டோம். வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன். எப்படியிருந் தாலும் செல்சியின் சொந்த மண் ணில் சமநிலை கண்டதும் சிறந்த ஒன்றுதான்," என்றார். சிட்டியும் லிவர்பூலும் ஒரே புள் ளிகள் பெற்றிருந்தாலும் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் சிட்டி முதலிடத்தைப் பிடித்தது. இரண்டு புள்ளிகள் பின்தங்கி உள்ள செல்சி மூன்றாவது இடத் தில் உள்ளது.
தற்போதைய பிரிமியர் லீக் பருவத்தில் இதுவரை ஆறு கோல்களைப் போட்டுள்ளார் செல்சி வீரர் ஈடன் ஹசார்ட். இப்பருவத்தில் ஆக அதிக கோல்களைப் போட்டுள்ளவரும் இவரே. படம்: ஏஎஃப்பி

