லண்டன்: செல்சியின் புதிய நிர் வாகி மௌரிசியோ சார்ரியின் தலைமைத்துவத்தின் கீழ் தாம் மிளிர்வதாக அந்தக் குழுவின் தற் காப்பு ஆட்டக்காரர் டேவிட் லூயிஸ் கூறியுள்ளார். ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ் அரங்கில் ஆக்கபூர்வமான சூழல் நிலவுவதே நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தில் தமது குழு அருமை யான தொடக்கத்தைக் கண்டிருப்பத ற் கான முக்கிய காரணங்களில் ஒன்று என அவர் சொன்னார். இப்பருவத்தில் செல்சி இது வரை விளையாடிய ஏழு ஆட்டங்க ளில் ஐந்தை வென்று இரண்டை சமன் செய்தது. கடந்த சனிக் கிழமை லிவர்பூலுடன் அந்தக் குழு விளையாடிய ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சம நிலையில் முடிந்தது.
பிரிமியர் லீக் தரவரிசையில் 17 புள்ளிகளுடன் செல்சி தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. மான்செஸ்டர் சிட்டியும் லிவர் பூலும் 19 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன. "காற்பந்து விளையாட சார்ரி எங்களுக்கு சுதந்திரத்தை வாரித்தருகிறார். எனவே, எங்களது திறமை வெளிப்படும்படி நாங்கள் ரசித்து விளையாடி வருகிறோம்," என்று செல்சி தொலைக்காட்சி யிடம் லூயிஸ் கூறினார். "சார்ரி எங்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையை ஊட்டுகிறார். அவருக்குத் தேவையானவற்றை எங்களிடம் காட்டுகிறார். ஆட் டங்கள் குறித்து தெளிவான விவர ங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
செல்சியின் புதிய நிர்வாகி மௌரிசியோ சர்ரியின் கீழ் தாம் காற்பந்தை ரசித்து விளையாட முடிவதாக அக்குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர் டேவிட் லூயிஸ் கூறுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

