'எனது எஃப்1 வாழ்வில் ஆக விசித்திரமான நாள்'

'எனது எஃப்1 வாழ்வில் ஆக விசித்திரமான நாள்'

1 mins read
f4db64b8-1b92-4f81-ab11-71c6d5eb8ca3
-

சோச்சி: ரஷ்யாவில் நேற்று முன் தினம் நடைபெற்ற எஃப்1 கிராண்ட் பிரீ விரைவு கார் பந்தயத்தில் பிரிட்டனின் லூயிஸ் ஹேமில்டன் வாகை சூடியிருந் தார். குறிப்பிடும்படியாக, ரஷ்ய கிராண்ட் ப்ரீயில் ஹேமில்டனின் வெற்றிக்கு வித்திட்டவர் அவரது மெர்சிடிசின் சகக் குழு ஓட்டு நரான வெல்டெரி போட்டஸ். பந்த யத்தின்போது இவர்தான் ஹேமில்டனுக்கு கடுமையான போட்டியைக் கொடுத்தார். பந்தயத்தில் பின்லாந்தின் போட்டஸ் முன் னணி வகித்தார்.

25வது சுற்றுக்குப் பின்னர் ஹேமில்டன் முந்திச் செல்ல வழிவிடுமாறு மெர்சிடிஸ் குழுவின் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதை அடுத்து, அதன்படி செய்தார் போட்டஸ். இந்த வெற்றியின் மூலம் எஃப்1 சாம்பியன்‌ஷிப்பில் தமக்கும் இரண்டாம் நிலையில் உள்ள ஃபெராரியின் செபாஸ் டியன் வெட்டலுக்கும் இடையே 50 புள்ளிகள் வித்தியாசத்தில் ஹேமில்டன் முன்னணி வகிக்கி றார். இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த ஹேமில்டன், இது தமது வாழ்க்கைத் தொழி லிலேயே ஆக விசித்திரமான நாள் என்றார். "மெர்சிடிஸ் நிர்வாகிகள் இந்த முடிவை எடுத்தனர். போட்டசிடம் நான் இது குறித்து எந்தவோர் உதவியையும் கோர வில்லை," என்று ஹேமில்டன் தெளிவுபடுத்தினார். போட்டியை விட்டுக்கொடுப் பதில் போட்டஸ் செய்தது போன்று அதிகமான குழுவின ருக்கு மனம் வராது என்று அவர் உருக்கமாகச் சொன்னார்.

எஃப்1 ரஷ்ய கிராண்ட் பிரீயில் வாகை சூடிய லூவிஸ் ஹேமில்டன், (வலது) இரண்டாம் நிலையில் வந்த வெல்டேரி போட்டஸ். படம்: ஏஎஃப்பி