மொரின்யோ: வெலன்சியா மீது மேன்யூ சீறிப் பாயும்

மான்செஸ்டர்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் நாளை அதிகாலை நடைபெறவிருக்கும் 'எச்' பிரிவு ஆட்டத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் மான்செஸ்டர் யுனைடெட் குழு தனது சொந்த மண்ணில் ஸ்பெயினின் வெலன் சியாவை எதிர்கொள்கிறது. இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தில் 29 ஆண்டுகளில் ஆக மோசமான தொடக்கத்தைச் சந்தித்திருக்கும் யுனைடெட், சாம் பியன்ஸ் லீக் போட்டியிலாவது சிறப்பாக விளையாடி தனது பெயரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டுள்ளது. முக்கியமாக, தம்மைச் சிறப்பானவர் என்று கூறி பெருமைப் படும் யுனைடெட் நிர் வாகி ஜோசே மொரின்யோ, நெருக் கடி நிலையைச் சந்தித்து வருகிறார்.

கடைசியாக யுனைடெட் விளை யாடிய பிரிமியர் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் ஹேம் குழுவிடம் 3-=1 எனும் கோல் கணக்கில் தோல் வியைத் தழுவியது. அத்துடன், லீக் கிண்ணப் போட்டியில் டெர்பி கவுன்டி குழுவிடம் பெனால் டியில் தோற்று அப்போட்டி யைவிட்டு யுனைடெட் எதிர்பாராமல் வெளியே றியது. எனவே, சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் வெலன்சியாவை வென்றே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் யுனைடெட் உள்ளது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தமது குழு சீறிப் பாயும் என்று மொரின்யோ கங்கணம் கட்டுகி றார்.

மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி ஜோசே மொரின்யோ, (இடது) டெர்பி கவுன்டி குழுவின் நிர்வாகி ஃபிராங்க் லாம்பார்ட்டுடன் உரையாடுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!