'பாலியல் புகார் பொய்ச் செய்தி'

1 mins read
0fb951c5-ec7f-43bc-ab0b-f3ffce92a209
-

லாஸ் ஏஞ்சலிஸ்: பிரபல காற் பந்து வீரர் ரொனால்டோ தன் மீதான பாலியல் பலாத்கார புகார் 'பொய்யான செய்தி' என்று மறுப்புத் தெரிவித்துள்ளார். கேத்ரின் மயோர்கா என்ற 34 வயது பெண்மணி, கடந்த 2009ஆம் ஆண்டு ரொனால்டோ தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறினார். அது மட்டுமின்றி இந்தத் தகவல்களை வெளியிடாமல் இருக்க தனக்குப் பணம் தருவ தாக வாக்குறுதி அளித்ததாக வும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்ஸ்டகிரா மில் நேரடியாக உரையாடிய போர்ச்சுகல் நட்சத்திரமும் யுவெ ண்டஸ் வீரருமான 33 வயது ரொனால்டோ, "என் மீது புகார் கூறி வெளியான செய்தி முற்றி லும் பொய்யானது," என்று பதி விட்டார். பின்னர் அவரது இப் பதிவு நீக்கப்பட்டுவிட்டது. "பல்வேறு தடவை இது போன்ற புகார்களில் சிக்க வைக்கப்பட்டேன். ஆனால் அவை உண்மையில்லை என்பது நிரூபிக்கப்பட்டது," என்றும் அவர் சொன்னார். PHOTO: INSTAGRAM

கேத்ரின் மயோர்கா, 34 வயது