பேலசின் வெற்றியைப் பறித்த பெனால்டி வாய்ப்பு

பேலசின் வெற்றியைப் பறித்த பெனால்டி வாய்ப்பு

1 mins read
e0265d13-bb5e-43e8-b81b-e8d41925752b
-

போர்ன்மத்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டமொன்றில் கிரிஸ்டல் பேலசை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வாகை சூடியது போர்ன்மத். முற்பாதி ஆட்டத்தில் கோல் போட்டு முன்னிலை வகித்த போர்ன்மத்தை பிற்பாதி நேரத்தில் சமன் செய்தது பேலஸ். ஆட்டம் முடியும் தறுவாயில் பேலசின் தற்காப்பு ஆட்டக்காரர் சாக்கோ, போர்ன்மத் வீரர் ஜெபர்ஃசன் லெர்மா பந்தைக் கைப்பற்று வதைத் தடுக்கும் வகையில் முகத்தை நோக்கி முன்னங் கையை உயர்த்தினார்.

இதற்காக போர்ன்மத் குழு விற்கு பெனால்டி வாய்ப்பை வழங் கினார் கள நடுவர். அவ்வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி கோலாக் கினார் ஸ்டானிஸ்லஸ். இதனால் ஒரு கோல் வித்தி யாசத்தில் வெற்றி பெற்ற போர்ன் மத், இப்பருவத்தின் ஏழு ஆட்டங் களில் நான்கு வெற்றிகளைப் பதிவு செய்தது. பேலஸ் நிர்வாகி ரோய் ஹாட் ஸன், "சாக்கோ வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை. அத்த கைய நிலையில், எதிரணிக்கு பெனால்டி வழங்கப்படுவதால் விளையாட்டாளர் மனம் வருந்த நேரிடுகிறது," என்றார்.