'கடுமையாக போராட வேண்டும்'

'கடுமையாக போராட வேண்டும்'

1 mins read
300df589-bb6c-41a1-8d07-6f3cca394aac
-

நேப்பிள்ஸ்: சென்ற முறை நேப்போலி குழுவின் வெற்றியைத் தடுத்த லிவர்பூல் காற்பந்துக் குழுவின் கோல்காப்பாளர் அலிசன் அக்குழுவை வெல்லக் கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார். நாளை அதிகாலை நடைபெற உள்ள சாம்பியன்ஸ் லீக் ஆட்டத் தில் நேப்போலி தன் சொந்த மண் ணில் லிவர்பூலுடன் மோதுகிறது. கிளோப் நிர்வாகியாக பதவி ஏற்றது முதல் கடந்த இரண்டு பருவங்களாக முன்னேறி வரும் லிவர்பூல் இப்பருவத்தில் பிரிமியர் லீக் பட்டம் வெல்ல சிட்டி, செல்சி யோடு போட்டி போட்டு வருகிறது. லிவர்பூலை பலம் பொருந்திய குழுவாக உருவாக்கி வரும் கிளோப், இப்பருவத் தொடக்கத் தில் பல புதிய ஆட்டக்காரர்களை வாங்கினார். அதில் இத்தாலிய ரோமா குழுவின் கோல்காப்பாளர் அலிசனும் ஒருவர். கடந்த மார்ச் மாதம் இத்தாலிய காற்பந்து லீக்கில் நேப்போலி குழு விற்கு எதிராக ரோமாவின் கோல் காப்பாளராக அலிசன் விளையாடி னார். அந்த ஆட்டத்தில் 4=2 என்ற கோல் கணக்கில் நேப்போலி தோல்வியடைந்தது.

லிவர்பூல் நிர்வாகி கிளோப்புடன் அதன் கோல் காப்பாளர் அலிசன் (மஞ்சள் சட்டை). கோப்புப் படம்