இழப்பீடு கோரும் பாகிஸ்தான்

1 mins read

துபாய்: மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாக மோதும் கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்திய அரசு அனுமதி அளிப்பதில்லை. இதனால் தங்களுக்கு ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண் டும் என்று இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனைத்துலக கிரிக் கெட் மன்றத்திடம் (ஐசிசி) புகார் அளித்தது. பாகிஸ்தானின் புகார் மனு குறித்து ஐசிசி நேற்று முன்தினம் விசாரணையைத் தொடங்கியது. மைக்கேல் பெலாப், ஜேன் பால்சன், அன்னபெல் பென்னட் ஆகியோர் இந்த விசாரணைக் குழுவில் இடம் பெற்று இருந்த னர். இந்த வழக்கு விசாரணைக் காக இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அனைத்துலக சட்ட நிபுணர்களை வாதாட நிய மித்துள்ளன. 2015 = 2023 வரையிலான காலகட்டத்தில் இந்தியா-பாகிஸ் தான் இடையிலான தொடர்கள் ரத்தாகின.