மாஸ்கோ: ஐரோப்பிய வெற்றியா ளரான ரியால் மட்ரிட், நேற்று அதிகாலை நடைபெற்ற சாம்பி யன்ஸ் லீக் காற்பந்து ஆட்டத்தில் சிஎஸ்கேஏ மாஸ்கோ குழுவிடம் 1=0 எனும் கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. தமது குழுவின் பின்னடை விற்கு வில்லனாக அமைந்தார் மத்தியத் திடல் ஆட்டக்காரரான டோனி குரூஸ். ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்தில் பெனால்டி எல்லையில் கோல்காப் பா ளரை நோக்கி அவர் பின்னால் அனுப்பிய பந்தை சிஎஸ்கேஏ வீரர் நிக்கோலா விலாசிச் லாப கரமாக பிடுங்கி வலைக்குள் புகுத்தினார். இந்தப் பிழையால் மட்ரிட் எதிர்பாராமல் பின்னுக்குத் தள்ள ப் பட்டது. கோல் கணக்கை உடனே சமநிலைப்படுத்த அந்தக் குழுவின் வீரர்கள் மேற்கொண்ட முயற்சிக்குப் பலன் கிடைக்கவி ல்லை.
மட்ரிட்டின் கரிம் பென்ஸிமா, காசிமிரோ, மரியானோ ஆகியோர் உதைத்த பந்து கோல் கம்பத்தின் மீது அடித்து திரும்பியது. தமக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக நட்சத்திர ஆட்டக் காரர் கேரத் பேல் இந்த ஆட்ட த்தில் விளையாடவில்லை. இதனால் முக்கிய தருணங் களில் கோல் போட்டு ஆட்ட த்தைச் சமநிலைப்படுத்த மட்ரிட் தடுமாறியது.

