தொடர் நெருக்கடியில் மொரின்யோ

தொடர் நெருக்கடியில் மொரின்யோ

1 mins read
8263611e-d36e-4049-832f-363c63fd7f0f
-

மான்செஸ்டர்: பட்ட காலிலேயே படும் என்ற முதுமொழிக்கு ஏற்ப, மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி ஜோசெ மொரின்யோவுக்கு நெருக் கடி தொடர்கிறது. இதற்கு அடையாளமாக நேற்று அதிகாலை இந்தப் பருவத்தில் திக்கித் தடுமாறும் ஸ்பானிய குழு வான வெலன்சியாவுடன் சாம்பி யன்ஸ் லீக் ஆட்டம் ஒன்றில் மோதிய யுனைடெட், வெற்றி பெற முடியாமல் 0=0 என பரிதாபமாக சமநிலை கண்டது. இத்தனைக்கும் யுனை டெட் டுக்கு ரேஷ்ஃபர்ட், அலெக்சிஸ் சான்செஸ் என தாக்குதல் ஆட் டத்தில் கவனம் செலுத்தக்கூடியவர்க ளை களமிறக்கிய போதும் யுனைடெ ட்டால் வெற்றி பெற முடியவி ல்லை.

இத்துடன், மான்செஸ்டர் யுனைடெட் விளையாடிய நான்கு ஆட்டங்களில் யுனைடெட் தோல் வியைத் தவிர வேறெதையும் காணாதது மொரின்யோவுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது. தொடக்கத்தில் யுனைடெட்டின் ஆட்டத்தில் விறுவிறுப்பு இருந் தாலும், போகப் போக வெலன்சியா ஆட்டத்தில் மும்முரம் காட்டியதாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது. யுனைடெட்டுக்கு கிடைத்த 'ஃப்ரீ கிக்' வாய்ப்பையும் ரேஷ்ஃ பர்ட் வீணடித்தார் என்றும் அதற்கு மேல் மேன்யூவால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் காற்பந்து விமர்சகர்கள் கருத்துரைக்கின் றனர். மான்செஸ்டர் யுனைடெட் விளையாடிய ஆட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களாக எந்த வெற்றியையும் பெறாதது அதன் ரசிகர்களை சோர்வடையச் செய்திருப்பதாக செய்தித் தகவல் கள் தெரிவிக்கின்றன.

மான்செஸ்டர் யுனைடெட் வீரர் ரொமேலு லுகாக்குவும் (வலது) வெலன்சியாவின் ஜோசே கயாவும் பொருதுகின்றனர். படம்: இபிஏ-இஎஃப்இ