முதல் போட்டியிலேயே முத்திரை

முதல் போட்டியிலேயே முத்திரை

1 mins read
64fbbd74-0ff9-450f-908e-8bea28d4dd22
-

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த ஆக இளம் இந்திய வீரர் (18 வயது 329 நாட்கள்), உலக அளவில் ஏழாவது இளம் ஆட்டக்காரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார் பிருத்வி ஷா. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக ராஜ்கோட்டில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் அப்பாஸ் அலி பெய்க்கின் (20 வயது 120 நாட்கள், 1959ஆம் ஆண்டு) சாதனையை இவர் முறியடித்தார். 99 பந்துகளில் சதம் கடந்த இவர் 134 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த ஆக இளம் இந்திய வீரர் எனும் சாதனையை முன்னாள் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் (17 வயது 107 நாட்கள், 1990ஆம் ஆண்டு) தக்க வைத்துள்ளார். படம்: ஏஎஃப்பி