முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா ஓட்டக்குவிப்பு

முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா ஓட்டக்குவிப்பு

1 mins read
c6b56ad2-bb6a-42c8-8b4c-eb2849fea1b6
-

ராஜ்கோட்: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதில், இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 364 ஓட்டங்கள் எடுத்து வலு வான நிலையில் உள்ளது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இரு டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. டாஸ் வென்ற இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி பந்தடிப்பை தேர்வு செய்தா ர்.

இந்திய டெஸ்ட் அணியின் 293வது வீரராக அறிமுகமாகியுள்ள பிருத்வி ஷா மற்றும் கேஎல்.ராகுல் இணை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால் கேப்ரியல் வீசிய முதல் ஓவரில் 'எல்பிடபிள்யூ' முறையில் 'டக் அவுட்' ஆகி ராகுல் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய சேத்தேஸ்வர் புஜாரா, பிருத்வி ஷா ஜோடி வெஸ்ட் இன்டீஸ் அணியின் பந்து வீச்சை நான்கு திசையிலும் விளாசினர். இதனால், இவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் வெஸ்ட் இண்டீசின் பந்து வீச்சாளர்கள் தடுமாறினர். அறிமுக டெஸ்ட் போட்டி என்ற பதற்றம் ஒருபுறம் இருந்தாலும் அதிரடியாக விளை யாடிய 18 வயதாகும் பிருத்வி ஷா, 99 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத் தார். இதன் மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 15வது இந்திய வீரர் எனும் பெருமைக்கு சொந்தக்காரர் ஆகிறார் அவர்.