சிங்கப்பூர்: முன்னாள் சிங்கப்பூர் காற்பந்து விளையாட்டாளரான இவரது மாமா, தேசிய அணிக் காக 121 முறை விளையாடியவர். இப்போது 24 வயது ஹுஸைஃபா அஸிஸ், தமது மாமா மாலிக் அவாப்பின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றவிருக்கிறார். லயன்ஸ் குழுவின் சிவப்பு சீருடையை இவர் அணியவிருக் கிறார். சிங்கப்பூரின் தேசிய காற்பந்துக் குழுவின் இடைக் காலப் பயிற்றுவிப்பாளரான ஃபாண்டி அகமது நேற்று முன் தினம் அறிவித்த 29 ஆட்டக்கா ரர்கள் அடங்கிய குழுவில் ஹுஸைஃபா முதன்முறையாக இடம்பெறுகிறார். தேசிய அளவில் புதிய ஆட் டக் காரர்களுக்கு வாய்ப்புகளைத் தந்து அவர்களின் ஆற்றலைச் சோதிப்பவர் ஃபாண்டி என்பது பலரும் அறிந்த ஒன்று. பீஷான் விளையாட்டரங்கில் அடுத்த வெள்ளிக்கிழமை மங்கோலியாவுடன் நட்புமுறை ஆட்டம் ஒன்றில் சிங்கப்பூரின் லயன்ஸ் குழு பொருதுகிறது.
அதற்குப் பின்னர் இம்மாதம் 17ஆம் தேதி மற்றோர் ஆட்டத்தில் அது கம்போடியாவை எதிர்கொள்கி றது. அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆசியான் காற்பந்து சம்மேளனத்தின் (ஏஎஃப்எஃப்) சுஸுக்கி கிண்ணப் போட்டியை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் தயாரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாக இந்த நட்புமுறை ஆட் டங்கள் விளங்கும். ஏஎஃப்எஃப் சுஸுக்கி கிண்ணப் போட்டியின் 'பி' பிரிவில் தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா, தீமோர்= லெஸ்ட்டே ஆகிய நாடுகளுடன் சிங்கப்பூர் மோதவுள்ளது. இந்நிலையில், தேசிய அணியில் தமது பெயர் இடம்பெறு வது என்பது தமக்கு கொடுக்கப்ப ட்ட அரிய வாய்ப்பு என்று பெரு மிதத்துடன் கூறுகிறார் சிங்கப்பூர் பிரிமியர் லீக்கின் பாலஸ்டியர் கல்சா குழுவுக்கு விளையாடிவரும் மத்தியத் திடல் ஆட்டக்காரரான ஹுஸைஃபா. "இருப்பினும், முன்கூட்டியே நான் கொண்டாடிவிடக்கூடாது. எனது உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தி, பயிற்றுவிப்பாளர்களைக் கவரும் வண்ணம் பயிற்சியின் போது சிறந்து விளங்க வேண்டும்," என்றார் இவர்.
சிங்கப்பூர் தேசிய காற்பந்து குழுவில் இடம்பெற்று இருக்கும் 24 வயது ஹுஸைஃபா அஸிஸ். தமக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள விழைகிறார் இவர். படம்: சிங்கப்பூர் பிரிமியர் லீக்

