நேப்பிள்ஸ்: சாம்பியன்ஸ் லீக் 'சி' பிரிவில் நேற்று அதிகாலை நடை பெற்ற காற்பந்து ஆட்டத்தில் இங் கிலிஷ் பிரிமியர் லீக்கின் லிவர்பூல் குழுவை இத்தாலியின் நேப்போலி குழு 1=0 எனும் கோல் கணக்கில் வென்றது. ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் லிவர்பூல் பெனால்டி எல்லைக்கு வெளியே ஜோசே கேல்ஜோன் அனுப்பிய பந்தை லொரென்ஸே„ இன்சிக்னி சறுக்கி அடித்த கோலால் நேப்போலியின் வெற் றிக்கு வித்திட்டார். ஆட்டம் சமநி லையில் முடியும் என எதிர்பார்த்த லிவர்பூல் வீரர்களுக்கும் ரசிகர்க ளுக்கும் பெரும் ஏமாற்றமே மிஞ்சி யது. லிவர்பூலின் இந்த எதிர்பாராத தோல்வியை அடுத்து, அக்குழு விற்கு தரம் போதாது என்று அதன் நிர்வாகி யர்கன் குளோப் வெளிப்படையாக கூறினார்.
"நாம் சிறப்பாக விளையாட வில்லை. இந்த ஆட்டத்தில் எங்க ளது கோல்காப்பாளர் மட்டும் தான் சிறந்து விளங்கினார் என்று கூற வேண்டும்," என்றார் அவர். "கோல் இலக்கை நோக்கி எங் களது ஆட்டக்காரர்கள் பந்தை உதைக்கவில்லையா? கடைசியாக இந்த நிலை எப்போது ஏற்பட்டது என்பது குறித்து எனக்கு நினை வில்லை. எனினும், இந்த ஆட்ட த்தின் முடிவுக்கு நானே பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன்," என்று குளோப் கூறினார். கடந்த சாம்பியன்ஸ் லீக் பருவ த்தில் இறுதிச் சுற்று வரை லிவர்பூல் சென்றிருந்தது. அதில் ரியால் மட்ரிட் குழுவிடம் அது தோல்வியைத் தழுவியது.

