வெம்ப்ளி: சாம்பியன்ஸ் லீக் 'பி' பிரிவு ஆட்டத்தில் லண்டனின் வெம்ப்ளி அரங்கில் நேற்று டோட் டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவுடன் பார்சிலோனா மோதியது. இதில் எதிர்பார்க்கப்பட்டதைப் போல பார்சிலோனா 4-2 எனும் கோல் கணக்கில் அபாரமாக வென்றது. ஸ்பானிய காற்பந்து லீக்கில் கடந்த மூன்று ஆட்டங் களில் வெற்றிக் கனியைச் சுவைத் திடாத பார்சிலோனா, இந்த ஆட்டத்தை எப்படியாவது வென்றே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. ஆட்டம் தொடங்கி இரண்டா வது நிமிடத்திலேயே பார்சிலோனாவி ன் ஃபிலிப்பே கொட்டின்யோ தமது குழுவிற்காக முதல் கோலை அடித்தார். அதைத் தொடர்ந்து குழுவின் இரண்டா வது கோலை இவான் ரிகிட்டிச் அற்புதமாக அடித்தார். கோல் இடைவெளியைக் குறைக்கும் விதமாக, டோட்டன் ஹமின் ஹேரி கேன் ஒரு கோலை அடித்து, தமது குழுவை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்தா ர். இதற்கிடையே, இந்த ஆட் டத்தின் தொடக்கத்தில் பார்சிலோ னாவின் நட்சத்திர நாயக னான லயனல் மெஸ்ஸி உதைத்த பந்து இருமுறை கோல் கம்பத்தை எட்டிப் பார்த்து திரும்பியது.
பார்சிலோனா ஆதிக்கம், டோட்டன்ஹம் தடுமாற்றம்
1 mins read
-

