புதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதி ரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்ற தொடக்க வீரர் முரளி விஜய் சரியாக விளையாடாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்து அவர் கூறும்போது, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு என் னிடம் தேர்வுக் குழுத் தலைவரோ உறுப்பினர்களோ பேசவில்லை. நீக்கத்துக்கான காரணத்தை வீரர் களிடம் தெரிவிக்க வேண் டும் என்றார். ஆனால் முரளி விஜய்யின் கருத்தை இந்திய அணி தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் மறுத்துள்ளார். "முரளி விஜய் அணியில் இருந்து ஏன் நீக்கம் செய்யப் பட்டார் என்பது குறித்து எனது சக தேர்வாளர் தேவங்காந்தி அவரிடம் தெளிவாக தெரிவித்து விட்டார். அதன்பிறகு முரளி விஜய் இப்படியொரு கருத்து தெரிவித்து இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
"ஷிகர் தவான் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டதற் கான காரணம் அவர் ஒரு நாள் போட்டியில் விளையாடும் ஆட் டத்தை டெஸ்ட் போட்டியில் வெளிப் படுத்தவில்லை. "அவ ருக்கு நாங்கள் நிறைய வாய்ப்பு கள் கொடுத்த பின்புதான் நீக்கும் முடிவை எடுத்தோம்," என்றார் தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத்.

