விராத் கோஹ்லி அபார சதம்; ஜடேஜா முதல் டெஸ்ட் சதம்

2 mins read
4fbf5a19-9e4f-4d36-92d4-2d852e99c9ea
-

ராஜ்கோட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கோஹ்லி சதம் விளா சினார். ஜடேஜா முதல் டெஸ்ட் சதம் அடித்தார். இந்தியா வந் துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 364 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கோஹ்லி (72), ரிஷப் பன்ட் (17) களத்தில் இருந்தனர். நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன் னிங்சைத் தொடர்ந்த இந்திய அணிக்கு ரிஷப் வேகமாக ஓட்டங்கள் குவித்தார். கீமோ பால் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் என விளாசிய ரிஷப், அரைசதம் கடந்தார்.

அடுத்து வந்த சேஸ் ஓவரிலும் பவுண்டரி, சிக்சர் என அடித்தார் ரிஷப். மறுபுறம் நிதானமான ஆட் டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி, கேப்ரியல் பந்துகளில் அவ்வப் போது பவுண்டரி அடித்தார். தொடர்ந்து பி‌ஷு பந்தை பவுண்ட ரிக்கு அனுப்பிய கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் 24வது சதம் எட்டினார். ரிஷப் 92 ஓட்டங்களுக்கு வெளி யேறினார். கோஹ்லி 139 ஓட்டங்கள் எடுக்க, அஸ்வின் 7, குல்தீப் 12, உமேஷ் யாதவ் 22 ஓட்டங்கள் எடுத்தனர். ஜடேஜா டெஸ்ட் அரங்கில் முதல் சதம் அடித்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 649 ஓட்டங்கள் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. ஜடேஜா (100), முகம்மது ஷமி (2) வெளியாகாமல் இருந்தனர்.