இதை ஏற்க முடியாது - ஜோசே மொரின்யோ,

இதை ஏற்க முடியாது - ஜோசே மொரின்யோ,

1 mins read

மான்செஸ்டர்: பெரும் நெருக்கடி யில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் நிர்வாகி ஜோசே மொரின்யோ, இந்தப் பருவத்தில் தம் குழுவின ரின் செயல்பாடு ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை எனத் தெரிவித் துள்ளார். கடைசியாக ஆடிய ஐந்து போட்டிகளில் யுனைடெட் குழு ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் இன்று பின்னிரவு நடக்கும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் அக்குழு, இந்தப் பருவத்தில் இன்னும் ஒரு வெற் றியைக்கூடப் பெறாத நியூகாசல் யுனைடெட்டை எதிர்த்தாடுகிறது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி கைகூடாமல் போனால் அது யுனைடெட் போன்ற பெரிய குழுவிற்கு நல்ல விஷயமல்ல என்பதை மொரின்யோ ஒப்புக் கொண்டார்.

நடப்பு இபிஎல் பருவத்தில் ஏழு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் பத்துப் புள்ளிகளுடன் யுனைடெட் பட்டியலின் பத்தாம் இடத்தில் உள்ளது. 1989ஆம் ஆண்டிற்குப் பிறகு அக்குழுவின் மோசமான தொடக்கம் இதுதான். சொந்த அரங்கான ஓல்ட் டிரா ஃபர்டிலும் அக்குழு இந்தப் பரு வத்தில் ஓர் ஆட்டத்தில்கூட வெற்றி பெறவில்லை. இது போதாதென்று, இவ்வார மத்தியில் நடந்த சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்திலும் அக்குழு ஸ்பா னிய குழுவான வெலன்சியா உடன் கோலேதுமின்றி சமநிலை கண்டது. இதனால் அடுத்தடுத்த ஆட் டங்களில் தொடர் வெற்றிகளைப் பெற்று, குழுவை மேலேற்ற வேண் டிய இக்கட்டான நிலையில் மொரின்யோ உள்ளார்.