மலேசியச் சுங்கச்சாவடியில் சிங்கப்பூரருக்கு பாஸ்போர்ட் பிரச்சினை; அதிகாரி மீது புகார்

முகம்மது ஃபவ்ஸி, 26, என்று தன்னைத் தெரிவித்துக்கொண்ட சிங்கப்பூரர், சென்ற ஆண்டு பிப்ரவரியில் திருமணம் செய்து கொண்டார். அதனை அடுத்து ஜோகூரில் இருக்கும் தன்னுடைய வீட்டிலிருந்து சிங்கப்பூருக்கு மோட்டார்சைக்கிளில் வேலைக்கு அன்றாடம் வந்து கொண்டிருந்தார். செப்டம்பர் 24ஆம் தேதி இரவு சுமார் 11.30 மணிக்குத் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது மலேசியச் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த அதிகாரி தன் பாஸ் போர்ட்டைக் கிழித்துவிட்டு தன் னிடம் லஞ்சம் கேட்டதாக திரு ஃபவ்ஸி கூறுகிறார்.

அதனையடுத்து தன் பாஸ் போர்ட்டை அதிகாரியிடமிருந்து வாங்கிக்கொண்டு திரு ஃபவ்ஸி சிங்கப்பூருக்குத் திரும்பிவிட்டார். சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் அதிகாரி ஒருவரிடம் இதுபற்றி திரு ஃபவ்ஸி கூறியபோது அவர் போலிசில் புகார் தெரிவிக்கும்படி ஆலோசனை தெரிவித்தார். அப்படியே செய்த திரு ஃபவ்ஸி, தனக்கு நேர்ந்த கதியைச் சென்ற வாரம் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி இருந்தார். அதேபோன்ற நிலையை தாங் களும் எதிர்நோக்கியதாக இதர மூவர் செய்தி அனுப்பியிருந்த தாகவும் திரு ஃபவ்ஸி கூறினார். இதனிடையே, திரு ஃபவ்ஸி யின் புகார் பற்றிக் கருத்துத் தெரி வித்த ஜோகூர் குடிநுழைவுத்துறை, அந்த அதிகாரிக்கு எதிராகப் விசாரணை தொடங்கி இருப்பதாக ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!