சுஸுகா (ஜப்பான்): ஜப்பான் ஃபார் முலா ஒன் கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் குழுவின் லூவிஸ் ஹேமில்டன் வாகை சூடியுள்ளார். அவரது நான்காவது தொடர் வெற்றி இது. சென்ற மாதம் சிங் கப்பூரில் நடைபெற்ற இரவு நேர கார் பந்தயத்தில் பெற்ற வெற்றியும் இதில் அடங்கும். மேலும் இப்பரு வத்தில் இதுவரை நடந்த ஏழு போட்டிகளில் ஆறில் அவர் வென் றுள்ளார். ஐந்தாவது உலக வெற்றியாளர் பட்டத்தை ஹேமில்டன் நெருங்கு கிறார். புள்ளிப் பட்டியலில் முத லிடத்தில் உள்ள அவரது நெருக்க மான போட்டியாளர் ஃபெராரியின் செபாஸ்டியன் வெட்டலைக் காட்டி லும் 67 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார். நடப்புப் பருவத்தில் இன்னும் நான்கு பந்தயங்கள் எஞ்சியுள்ள நிலையில் ஆஸ்டனில் நடக்க இருக்கும் யுஎஸ் கிராண்ட் பிரியில் வென்று வெட்டலைக் காட்டிலும் மேலும் எட்டுப் புள்ளிகள் பெற்றால் உலக வெற்றியாளர் பட்டத்தை ஹேமில்டன் மீண்டும் ஒருமுறை பெறுவார். அவர் ஏற்கெனவே 2008, 2014, 2015, 2017 என நான்கு முறை உலக எஃப்1 வெற்றியாளர் பட்டத்தை வென்றுள்ளார்.
ஜப்பான் எஃப்1 கார் பந்தயத்தில் நேற்-று வாகை சூடிய மகிழ்ச்சியில் லூவிஸ் ஹேமில்டன். படம்: இபிஏ

