விமர்சனம் செய்த முரளி விஜய், கருண் நாயர் மீது நடவடிக்கை

விமர்சனம் செய்த முரளி விஜய், கருண் நாயர் மீது நடவடிக்கை

1 mins read
Google News Preferred Icon

புதுடெல்லி: பந்தடிப்பாளர் கருண் நாயர் தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய், ஆகி யோர் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட வில்லை. இங்கிலாந்தில் சிறப் பாக ஆடாத காரணத்தால் முரளி விஜய்க்கு வாய்ப்பு தரப்பட வில்லை. அணியில் இருந்து நீக்கப்பட்ட இருவரும் தேர்வு குழுவினர் மீது விமர்சனம் செய்து இருந்தனர். அணியில் சேர்க்கப்படாதது குறித்து தேர்வுக் குழுவினர் தங்களைத் தொடர்பு கொள்ளவில்லை என அவர்கள் கூறி இருந்தனர்.

அவ்விருவரின் விமர்சனத் துக்கு தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் விளக்கம் அளித்து இருந்தார். இந்நிலை யில் தேர்வுக் குழுவை விமர்ச னம் செய்ததால் முரளி விஜய், கருண் நாயர் ஆகியோர் மீது கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகக் கூறப்படுகி றது. தேர்வு கொள்கைகளைப் பற்றி பேசியதன் மூலம் முரளி விஜய்யும், கருண் நாயரும் ஒப் பந்தத்தை மீறிவிட்டதாக வாரிய உறுப்பினர் ஒருவர் கூறினார்.